தற்காலிக ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
கும்பகோணம் அருகே தற்காலிக ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
கும்பகோணம் அருகே தற்காலிக ஊழியர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
தற்காலிக ஊழியர்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கல்லப்புலியூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது60). இவர் திருவிசநல்லூர் ஊராட்சியில் தற்காலிக மின்சார ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று திருவிசநல்லூர் மேட்டுத்தெரு அருகில் மின் பாதையில் உரசிக் கொண்டிருந்த மரத்தை வெட்டிவிட்டு தெரு விளக்கை சரி செய்யும் பணியில் மகாலிங்கம் ஈடுபட்டிருந்தார்.
மின்சாரம் தாக்கி பலி
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மகாலிங்கம் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.
இதுதொடர்பாக திருவிடைமருதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று மகாலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதிைய சேர்ந்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.