மின்சாரம் தாக்கி 3 மாடுகள் சாவு
திருக்காட்டுப்பள்ளி அருகே வயலில் மேய்ந்து கொண்டிருந்த 3 மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
திருக்காட்டுப்பள்ளி,
திருக்காட்டுப்பள்ளி அருகே வயலில் மேய்ந்து கொண்டிருந்த 3 மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.
மின்சாரம் தாக்கி சாவு
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள இளங்காடு கிராமத்தின் முன் பட்ட குறுவை அறுவடை செய்யப்பட்ட வயல்களில் மாடுகள் மேய்ந்து வருகின்றன.நேற்று காலை நேமம் அக்ரவர்த்தி பகுதியை சேர்ந்த ராசு என்பவருடைய 2 பசுமாடுகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி இளங்காடு கிராமத்துக்கு செல்லும் சாலை அருகில் இருந்த வயலில் மேய்ச்சலுக்கு சென்றன.அந்த வயலில் நேற்று முன்தினம்இரவு இடி மின்னலுடன் பெய்த மழை காரணமாக வயலில் மின்கம்பி அறுந்து கிடந்தது.இந்த மின்கம்பியை எதிர்பாராதவிதமாக 3 மாடுகளும் மிதித்தன. இதனால் மின்சாரம் தாக்கி 3 மாடுகளும் உயிரிழந்தன.
விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த இளங்காடு கிராமத்தை சேர்ந்த ஒன்றியக் குழு உறுப்பினர் ரம்யாசெந்தில்குமார் மின் வாரியத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் சம்பவ இடத்துக்குசென்ற மின்வாரிய பணியாளர்கள் வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.மேலும் திருக்காட்டுப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்குசென்று விசாரணை நடத்தினர். மின்சாரம் தாக்கி 3 பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.