ஈரோடு சத்தி ரோட்டில் ஆபத்தான மின் கம்பத்தை அகற்ற வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
ஈரோடு சத்தி ரோட்டில் ஆபத்தான மின் கம்பத்தை அகற்ற வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை;
ஈரோட்டில் இருந்து சத்தி வரை சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஈரோடு சத்தி ரோடு அருள்வேலவன் நகர் பகுதியில் ரோட்டின் நடுவில் மின் கம்பம் ஒன்று நடப்பட்டது. இந்த கம்பத்தின் மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு கார் ஒன்று மோதியது.
இதன் காரணமாக மின் கம்பம் சாய்ந்தபடி உள்ளது. அது எப்போது வேண்டும் என்றாலும் கீழே விழுந்து ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த கம்பத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.