26 கிராம ஊராட்சிகளுக்கு மின்சார ஆட்டோ

விளாத்திகுளத்தில் 26 கிராம ஊராட்சிகளுக்கு மின்சார ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-09-30 19:00 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 26 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளுக்கு ரூ.94.77 லட்சம் மதிப்பீட்டில் மின்சார ஆட்டோ வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் முனியசக்தி ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், தங்கவேல், விளாத்திகுளம் தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் சூர்யா அய்யன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் சுமதி இமானுவேல், ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், மாலதி, தி.மு.க. வார்டு செயலாளர் ஸ்டாலின் கென்னடி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மாரீஸ்வரி, கலைச்செல்வி, விளாத்திகுளம் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்