மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல்

மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-07 18:45 GMT

மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் வருகிற 23-ந் தேதி நடக்கிறது என்று கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல்

ராமநாதபுரம் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் இந்த மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் ஊரக பகுதிகளில் மாவட்ட கவுன்சிலர்களும், நகர்புற அமைப்புகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்களும் வாக்களிக்க உள்ளனர். ஊரகத்திற்கு 9 திட்டக்குழு உறுப்பினர்களும், நகர்புறத்திற்கு 3 திட்டக்குழு உறுப்பினர்களும் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

இந்த தேர்தலுக்கு நேற்று முதல் வருகிற 10-ந் தேதி வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும். ஊரக பகுதிகளுக்கான வேட்புமனுக்களை ஊராட்சி உதவி இயக்குனரிடமும், நகர்புற பகுதிகளுக்கான வேட்புமனுக்களை நகர்புற உதவி திட்ட அலுவலரிடமும் தாக்கல் செய்யலாம்.

வாக்கு எண்ணிக்கை

வேட்புமனுக்கள் 12-ந் தேதி பரிசீலிக்கப்படும். 14-ந் தேதி பிற்பகல் 3 மணி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த பதவிகளுக்கு போட்டி ஏற்பட்டால் 23-ந் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஊரக மற்றும் நகர்புற பகுதிகளுக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிந்தவுடன் பிற்பகல் 3 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அரசு அறிவிக்கும் நாளிலிருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்பின் காலம் முடியும் வரை திட்டக்குழு உறுப்பினராக பதவி வகிப்பார்கள். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்