அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தலையிட முடியாது - தேர்தல் ஆணையம்

அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

Update: 2024-02-06 09:47 GMT

சென்னை,

அ.தி.மு.க. வில் உட்கட்சி தேர்தலை நடத்தாமல் நிர்வாகிகளை நியமிப்பதற்கு தடை கோரி திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்திருந்தார்.

இந்நிலையில் இன்று விசாரணக்கு வந்த இந்த வழக்கில் அ.தி.மு.க உட்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக ஐகோர்ட்டில் தெரிவித்தது.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த ஐகோர்ட்டு, உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் சிவில் நீதிமன்றத்தை அணுகுமாறும் ஐகோர்ட்டு அறிவுறுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்