தோ்தல் குறித்த விழிப்புணர்வு முகாம்
தோ்தல் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
சிவகாசி கல்லமநாயக்கர்பட்டி எஸ்.எம்.எஸ்.கல்லூரியில், தேர்தல் விழிப்புணர்வு முகாம் கல்லூரி தாளாளர் குன்னக்குடி முத்துவாழி தலைமையில் நடைபெற்றது. கல்லூரி டீன் டாக்டர் பிரபுதாஸ் குமார் முன்னிலை வகித்தார். வெம்பக்கோட்டை தாலுகா துணை தாசில்தார் (தேர்தல்) ரவிச்சந்திரன் தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் பற்றி மாணவர்கள் மத்தியில் பேசினார். முகாமில் ஆலங்குளம் கிராம நிர்வாக அதிகாரி சுபாஷ் சந்திர போஸ், பாலிடெக்னிக் முதல்வர் ராஜநாயகன். நர்சிங்கல்லூரி முதல்வர் கவிதா எலிசபெத், கல்லூரி நிர்வாக அதிகாரி மாரிமுத்து, மக்கள்தொடர்பு அதிகாரி பொன்னுச்சாமி, பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.