பேரன், மகளுடன் விஷம் குடித்த மூதாட்டி சாவு

பேரன், மகளுடன் விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-02-11 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

பேரன், மகளுடன் விஷம் குடித்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாய்-மகள்

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள விட்டிலாபுரத்தை சேர்ந்தவர் சேர்மன். இவரது மனைவி ஞானபாக்கியம் (வயது 65).

இவர்களது மகள் பாக்கியகோமதி (30). இவரை திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இந்த தம்பதிக்கு முத்து செல்வகோமு (7) என்ற மகன் உள்ளார்.

விஷம் குடித்து மயங்கினர்

பாக்கியகோமதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், மகனுடன் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பல்வேறு நோய்களால் ஞானபாக்கியம், பாக்கியகோமதி ஆகியோர் அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் ஒரு அறையில் ஞானபாக்கியம், பாக்கியகோமதி, முத்துசெல்வகோமு ஆகியோர் எறும்பு பொடி (விஷம்), சிகிச்சைக்குரிய மாத்திரைகள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து குடித்து மயங்கினார்கள்.

மூதாட்டி சாவு

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஞானபாக்கியம் நேற்று பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்