விபத்தில் வடமாநில மூதாட்டி பலி

விபத்தில் வடமாநில மூதாட்டி உயிரிழந்தார்.

Update: 2022-10-31 19:20 GMT

உத்தரபிரதேச மாநிலம், அலகாபாத்தில் இருந்து சுமார் 50 பேர் ஆன்மிக சுற்றுலாவாக ராமேசுவரம் கோவிலுக்கு பஸ்சில் சென்றனர். நேற்று முன்தினம் அதிகாலை அவர்கள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் வழித்துணை ஆஞ்சநேயர் கோவில் அருகே பஸ்சை நிறுத்தி ஒரு டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது ஜவகர்லால் சிங் என்பவரின் மனைவி சியாம்குமாரி (வயது 60) சாலையின் மறுபக்கம் சென்று விட்டு, மீண்டும் பஸ் ஏறுவதற்காக சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சியாம்குமாரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்