அரசு பஸ் மோதி மூதாட்டி சாவு

அரசு பஸ் மோதி மூதாட்டி உயிரிழந்தார்

Update: 2023-04-23 00:52 GMT


மதுரை களிமங்கலம் ஓடைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்தையா மனைவி ராக்கு (வயது 60). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ரஞ்சித்குமார் அளித்த புகாரின் பேரில் கருப்பாயூரணி போலீசார், அரசு பஸ் டிரைவர் ரமேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்