கார் மோதி முதியவர் படுகாயம்

கார் மோதி முதியவர் படுகாயம் அடைந்தார்.;

Update:2023-02-10 00:01 IST

நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 70). இவர் குறுக்குச்சாலை பகுதியில் உள்ள ஒரு டீக்கடைக்கு வந்து டீ குடித்தார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக நொய்யல் பஸ் நிறுத்தம் அருகே சாலையை கடப்பதற்காக இடது புறம் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று பாலகிருஷ்ணன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, அந்த காரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்