பஸ் மோதி முதியவர் பலி

பணகுடியில் பஸ் மோதி முதியவர் பலியானார்.;

Update:2023-06-26 01:58 IST

பணகுடி;

நெல்லை மாவட்டம் பணகுடி கலந்தபனையை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 60). கூலித் தொழிலாளி. இவர் நேற்று இரவு 8.30 மணி அளவில் கலந்தபனை கனரா வங்கி அருகே ரோட்டை கடந்து வடக்கு நோக்கி சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த செல்லத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்ததும் பணகுடி போலீசார் விரைந்து வந்தனர். அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தையொட்டி சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்