ஈரோட்டில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
ஈரோட்டில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஈரோட்டில் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூதாடும் பழக்கம்
ஈரோடு முனிசிபல் காலனி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் பெரியசாமி என்கிற அண்ணாதுரை (வயது 60). ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவருடைய மனைவி பெரியநாயகி. பெரியசாமிக்கு மது குடிக்கும் பழக்கமும், சூதாடும் பழக்கமும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் அதிகமாக பணத்தை இழந்துள்ளார். இதனால் பெரியசாமி மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந்தேதி பெரியநாயகி, சென்னையில் உள்ள தனது மகனை பார்க்கச்சென்றார். ஈரோட்டில் இருந்த பெரியசாமியின் மகள் நேற்று முன்தினம் தனது தந்தை வீட்டுக்கு சென்றார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகுநேரமாக சத்தம்போட்டும் பெரியசாமி கதவை திறக்கவில்லை.
சாவு
இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது மின்விசிறியில் தூக்குப்போட்டு பெரியசாமி தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், தந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பெரியசாமி உயிரிழந்விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.