மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

சாலையின் குறுக்கே நாய் வந்ததால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

Update: 2023-09-19 19:49 GMT

தஞ்சாவூர்;

பெரம்பலூர் மாவட்டம் அம்மன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமதுஅலி(வயது 62). இவர் மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள மகன் முகமதுஅப்பாஸ் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். சம்பவத்தன்று முகமதுஅலி மருத்துவ சிகிச்சைக்காக தனது மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்றார். மோட்டார்சைக்கிளை முகமது அப்பாஸ் ஓட்டினார். தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள சிந்தாமணி குடியிருப்பு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் முகமது அலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முகமது அலி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தஞ்சை கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்