வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

Update: 2023-04-14 19:01 GMT

ஆலங்குடி கலைஞர் காலனியை சேர்ந்தவர் சிதம்பரம் (வயது 93). இவர் ஆலங்குடி-கறம்பக்குடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று சிதம்பரம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிதம்பரம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்