வாகனம் மோதி முதியவர் பலி

வாலாஜா அருகே வாகனம் மோதி முதியவர் பலியானார்.;

Update:2022-08-05 00:01 IST

வாலாஜாபேட்டையை அடுத்த வன்னிவேடு ஆஞ்சநேயர் கோவில் எதிரில் உள்ள பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்