உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு முதியவர் தற்கொலை

மனைவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு முதியவர் தற்கொலை செய்து கொண்டாா்.;

Update:2022-05-30 23:25 IST

சென்னிமலை:

சென்னிமலை அருகே உள்ள நாமக்கல்பாளையத்தை சேர்ந்தவர் பூசாமணி (வயது 67). இவருடைய மனைவி சரஸ்வதி. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக சரஸ்வதி படுத்த படுக்கையாக உள்ளார். இவரை பூசாமணி கவனித்து வந்ததாக தெரிகிறது. மேலும் மனைவிக்கு நோய் குணமாகவில்லையே என்று பூசாமணி வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் காணப்பட்டார். இதனால் அவர் வாழ்வதைவிட சாவதே மேல் என்ற முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பூசாமணி உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு விட்டார். இதனால் மயங்கி விழுந்த அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு டாக்டர்கள் பூசாமணிக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்