வயதான தம்பதி தற்கொலை

புதுக்கோட்டையில் வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். மகன் சரியாக கவனிக்காததால் விபரீத முடிவு எடுத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-04-25 18:10 GMT

தம்பதி தற்கொலை

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 64). இவரது மனைவி லலிதா (56). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகனுடன் சுப்ரமணியன்-லலிதா தம்பதியினர் வசித்து வந்தனர்.

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த சுப்ரமணியன், லலிதா தம்பதியினர் விஷம் தின்று இறந்து கிடந்தனர். இந்த நிலையில் வெளியில் சென்று இருந்த மகன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது தாயும், தந்தையும் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கணேஷ்நகர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன? விசாரணை

வயதான தம்பதி தற்கொலை குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகன் சரியாக கவனிக்காததால் தம்பதியினர் விபரீத முடிவு எடுத்து தற்கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்