'மக்கள் ஏமாந்தால் தாய் பாலுக்கு கூட ஜி.எஸ்.டி. விதிப்பார்கள்'- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

‘மக்கள் ஏமாந்தால் தாய் பாலுக்கு கூட ஜி.எஸ்.டி. விதிப்பார்கள்’- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டி

Update: 2022-08-11 21:49 GMT

நம்பியூர்

நம்பியூரில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செல்லும் இடங்களில் எல்லாம் சட்டத்தை மீறுகிறார். காவல்துறை சொல்வதை கேட்பதே கிடையாது.

ஈரோட்டில் ஊர்வலம் செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியும் கேட்காமல் ஊர்வலம் சென்றுள்ளார்.

இதுபோன்ற செயல்கள் முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு அழகா?. தற்போது பால், தயிர், நெய் போன்ற பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. விதித்துள்ளார்கள். இன்னும் சில நாட்கள் சென்றால் மக்கள் ஏமாந்து இருந்தால் தாய்ப்பாலுக்கு கூட ஜி.எஸ்.டி. விதிப்பார்கள். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெருவில் இறங்கி போராடுவதை விட தெருக்களில் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்தால் மக்களுக்காவது நன்மையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்