சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த மேலும் 8 பேர் மயங்கி விழுந்தனர்

சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த மேலும் 8 பேர் மயங்கி விழுந்தனர்.

Update: 2022-06-05 19:59 GMT

கே.கே.நகர்:

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை, வங்காளதேசம், ரஷ்யா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்குள்ள இலங்கை அகதிகள் தங்களை முகாமில் அடைத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தண்டனை காலம் முடிந்து விட்டதால் தங்களை விடுதலை செய்யக்கோரி சிறப்பு முகாமில் கடந்த 20-ந் தேதி முதல் 18 பேர் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி 6 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தின்போது மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து 17-வது நாளாக சிறை வளாகத்துக்குள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வந்த மேலும் 8 பேர் நேற்று மயங்கி விழுந்தனர். அவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக போலீசார் அனுமதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்