முட்டை விலை 10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்ந்து 460 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-08-23 18:45 GMT

10 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக அதிகரித்து உள்ளது.

கறிக்கோழி கிலோ ரூ.118-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.8 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.110 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.83-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

வரும் நாட்களில்...

இது குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

தமிழகத்தில் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அதனால் முட்டை உற்பத்தி சுமார் 20 சதவீதம் வரை சரிந்து உள்ளது. அதன்படி தினசரி 5 கோடியாக இருந்த முட்டை உற்பத்தி, தற்போது 4 கோடியாக குறைந்து உள்ளது.

மேலும் தமிழகம், கேரளாவில் ஆடி மாதம் முடிந்ததை தொடர்ந்து முட்டை நுகர்வு அதிகரித்து, விற்பனையும் உயர்ந்து உள்ளது. வரும் நாட்களில் முட்டை கொள்முதல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்