நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டை விலை 470 காசுகளாக அதிகரித்து உள்ளது.
கறிக்கோழி கிலோ ரூ.122-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.19 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.103 ஆக குறைந்தது. முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.