கல்விக்கடன் வழங்கும் முகாம்

கல்விக்கடன் வழங்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.

Update: 2023-09-23 17:57 GMT

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கல்விக்கடன் வழங்கும் முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. 10-ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படிப்பதற்கும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாம் ஆண்டு முதல் நான்காம் ஆண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுநிலை கல்வி படித்து கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் கல்விக்கடன் வழங்கப்பட உள்ளது. முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல், ரேஷன் அட்டை நகல், பான் அட்டை நகல், சாதி சான்றிதழ் நகல், கல்லூரி அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்றிதழ் நகல், முதல் பட்டதாரி சான்றிதழ், 2 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் வருகை தர வேண்டும். மேலும் மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு முகாம் நடக்கும் இடத்தில் இ-சேவை மையம் மூலம் பதிவு செய்து தரப்படும் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்