255 மாணவர்களிடம் இருந்து கல்வி கடன் விண்ணப்பங்கள்
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 255 மாணவர்களிடம் இருந்து கல்வி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு முகாம் மூலம் 255 மாணவர்களிடம் இருந்து கல்வி கடன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சிறப்பு முகாம்
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் சிறப்பு கல்வி கடன் முகாம் 2 நாட்கள் நடைபெற்றது. கடந்த 21-ந் தேதி 9 தாலுகாவிலும், நேற்று சிவகாசி தாலுகாவிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
9 தாலுகாக்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 156 மாணவ-மாணவிகளிடமிருந்து ரூ. 4 கோடியே 86 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான கல்வி கடன் பெறுவதற்கான விண்ணப்பம் பெறப்பட்டது. மேலும் 15 மாணவ-மாணவிகளுக்கு ரூ.75 லட்சத்து 34 ஆயிரம் உடனடி கல்வி கடன் வழங்குவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
கல்வி கடன்
மேலும் சிவகாசி தாலுகாவில் நடைபெற்ற முகாமில் 99 மாணவ-மாணவிகளிடம் இருந்து ரூ. 4 கோடியே 80 லட்சத்து 74 ஆயிரம் மதிப்புள்ள கல்வி கடன் வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது. மேலும் 14 மாணவ-மாணவிகளுக்கு உடனடி கல்வி கடனாக ரூ. 99 லட்சத்து 12 ஆயிரம் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
ஆக மொத்தம் மாவட்டத்தில் நடைபெற்ற கல்வி கடன் முகாம்களில் 255 மாணவ-மாணவிகளிடம் இருந்த ரூ.9 கோடியே 66 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான கல்வி கடன் பெற வேண்டி விண்ணப்பம் பெறப்பட்டது. இதில் 29 மாணவ-மாணவிகளுக்கு உடனடி கல்விக்கடனாக ரூ.1 கோடியே 74 லட்சத்து 46 ஆயிரம் கல்வி கடன் வழங்குவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.
மேற்கண்ட தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.