அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் பெருவிழா: விவசாயி கதையை சொல்லி எடப்பாடி பழனிசாமி பேச்சு
அதிமுக ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம்.;
சென்னை,
சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கொண்டாடினார். பின்னர் மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி,
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள். ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்று கூறியவர் இயேசு. இயேசு பிறந்த தினத்தை உலகம் முழுதும் கிறிஸ்துமஸ் தினமாக கொண்டாடி வருகிறோம்
இயேசு பிறந்த தினம் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் மகிழ்ச்சி இல்லை. உலகில் அனைவருக்கும் மகிழ்வான நாளாகும். அதிமுக ஆட்சிக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு செய்த நன்மைகள் ஏராளம். ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் கல்வி அவசியம். கல்விக்கு முக்கியம் கொடுத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
அதிமுக கொண்டு வந்த திட்டத்தை இனி எந்த அரசாலும் கொண்டுவர முடியாது. ஜெயலலிதா முல்லைப் பெரியாறு அணையை அமைத்த கிறிஸ்துவேர் பென்னிகுயிக்கு மணிமண்டபம் அமைத்து பெருமைப்படுத்தினார். ஜனாதிபதி பதவிக்கு சிறுபான்மை சேர்ந்தவர் வரவேண்டும் என்று ஏபிஜே அப்துல் கலாமை முன்மொழிந்தவர் ஜெயலலிதா. கிறிஸ்தவர் மகளிர் சுய உதவி குழு கொண்டு வந்தவர் ஜெயலலிதா. ஐந்து கோடி வரை அதற்கான நிதி வழங்கப்பட்டது.
தமிழகத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா இரு பெரும் தலைவர்கள் தான் ஏழைகளுக்காக வாழ்ந்து மறைந்தவர்கள். அவர்கள் போல் நாமும் வாழ வேண்டும். ஏழைகள் இல்லை என்ற நிலையை கொண்டு வருவது தான் அதிமுகவின் நிலைப்பாடு. அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா காலத்தில் 9 மாதம் அம்மா உணவகத்தில் ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
தாலிக்கு தங்கம், முதியோர் உதவித்தொகை 5 லட்சம் பேருக்கு கொடுத்து அறிவிப்பை வெளியிட்டது. அதன் மூலம் 90% முதியோர்களுக்கு உதவியது அதிமுக அரசு தான். அதிமுக ஆட்சியில் ஏழை குழந்தைகளுக்கு மடிக்கணிணியை வழங்கப்பட்டது. ஜெயலலிதாவை தொடர்ந்து ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழா அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. சிறுபான்மை இனத்தின் உண்மையான பாதுகாப்பு அதிமுக என்றும் செயல்படும். நாம் பொறுமையுடன் நமக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை உண்மையாகவும், கவனமாகவும் செய்தால் அதில் வெற்றி பெற முடியும். அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்