கவர்னர் ஆர்.என். ரவியை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை, எடப்பாடி பழனிசாமி இன்று சந்திக்கிறார்.

Update: 2024-03-10 03:13 GMT

சென்னை,

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஜாபர் சாதிக்குடன் நெருக்கம் காட்டியது தெரியவருவதாகவும், இதற்கு தார்மீக பொறுப்பேற்று இருவரும் பதவி விலக வேண்டும் எனவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து புகார் மனுவை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களின் விவரங்களை அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்