எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.;

Update:2023-07-05 07:43 IST

சென்னை,

சென்னையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு அதிமுக தலைமைக் கழக செயலாளர்கள் மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு மற்றும் மதுரை மாநாடு குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. மேலும் மேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, ஓபிஎஸ் அடுத்து நடத்த இருக்கும் மாநாடு, அதிமுக - பாஜக கூட்டணி, அதிமுக உறுப்பினர் சேர்க்கை பணிகளின் விவரம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவிவரும் நிலையில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்