மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை பாதிப்புகளை எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு

சீர்காழி பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.;

Update:2022-11-16 05:23 IST

மயிலாடுதுறை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் பகுதியில் கடந்த 11-ந் தேதி இரவு 44 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. இதனால் குடியிருப்புகள், விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்தது. இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றி பாதுகாப்பு முகாம்களில் தாங்க வைக்கப்பட்டனர்.

சீர்காழி பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மழை பாதித்த பகுதிகளை தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க .இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்குகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் பவுன்ராஜ், மாவட்ட அவை தலைவர் பாரதி உள்பட கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்