பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடக மற்றும் செய்திதொடர்பு பிரிவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.;

Update:2024-02-26 17:15 IST

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த் ஸ்ரீனிவாசனுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பதிவிட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்