ஏற்காட்டில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு...!

ஏற்காட்டில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2023-01-27 15:43 IST
ஏற்காட்டில் பலத்த சத்தத்துடன் நில அதிர்வு...!

சேலம்,

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று 12 மணி அளவில் பலத்த சத்தத்துடன் வெடித் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. இதன் விளைவாக சுமார் 2 விநாடிகள் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே ஓடிவந்தனர்.

இந்த அதிர்வானது ஏற்காடு டவுன் மட்டுமில்லாது சுற்றியுள்ள கிராமங்களிலும் உணரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஏற்காடு சுற்றுவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, நிலஅதிர்வு குறித்து டெல்லியில் இருந்துதான் தகவல் வரவேண்டும். தகவல் கிடைத்த பின்னர் நிலஅதிர்வு குறித்து உறுதிப்பத்தப்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்