வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு 'இ' சான்றிதழ்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் ‘இ’ சான்றிதழ் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-08-17 18:44 GMT

வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் (அல்லது) ஒரே தொகுதியில், ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கண்டறிவதற்காகவும் நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது ஆதார் எண்ணினை தாமாகவே முன்வந்து தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திடும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் 'இ' சான்றிதழ் வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இச்சான்றிதழை பெற்றிட கீழ்கண்ட நடைமுறையினை பின்பற்றிட வேண்டும். அதன்படி நேஷனல் வோட்டர்ஸ் சர்வீஸ் போர்ட்டல் (NVSP) (https://www.nvsp.in), வோட்டர்ஸ் ஹெல்ப்லைன் ஆப் (VHA) (https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen&hl=en), வோட்டர் போர்ட்டல் (https://voterportal.eci.gov.in) ஆகிய ஏதேனும் ஒரு செயலியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்கள் ஆதார் எண்ணிணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்திட வேண்டும்.

இ-சான்றிதழ்

வெற்றிகரமாக ஆதார் எண்ணினை இணைத்த பின்பு அதற்கு வழங்கப்படும் குறியீட்டு எண்ணினை தனியாக குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் https://elections.tn.gov.in/getacertificate என்ற இணையதளத்தின் முகவரிக்கு சென்று உங்களது மொபைல் எண்ணிணையும், ஓ.டி.பி. எண்ணையும், ஏற்கனவே குறித்து வைத்துள்ள குறியீட்டு எண்ணையும் உள்ளீடு செய்தால் சான்றிதழ் கிடைக்கும்.

சிறந்த ஜனநாயக நடைமுறைக்காக ஆதார் எண்ணினை இணைத்தல் என்ற முறையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களது ஆதார் எண்ணினை இணைத்திடும் முதல் 1,000 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் இச்சான்றிதழானது வழங்கப்படும் என்பதால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணினை வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையுடன் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளை பின்பற்றி இணைத்து 'இ' சான்றிதழ்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்