சாத்தான்குளத்தில் தசரா விழா

சாத்தான்குளத்தில் தசரா விழா நடந்தது.

Update: 2022-10-08 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வண்டிமலைச்சி- வண்டி மலையான் கோவிலில் தசரா விழா கடந்த 26-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. விழாவையட்டி பக்தர்கள் பல்வேறு வேடமணிந்து காணிக்கை சேகரித்து அம்பாளுக்கு செலுத்தினர். விழா நாட்களில் மஞ்சள் பெட்டி ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம் மற்றும் சுவாமி- அம்மாளுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு புஷ்ப சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா வந்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று நேற்று மதியம் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. இதையடுத்து சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

இதேபோல் சாத்தான்குளம் வடக்குத்தெரு தேவி ஸ்ரீமாரியம்மன் கோவிலில் தசரா விழா நடந்தது. நிறைவு நாளில் அம்பாள் பூஞ்சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்