உடன்குடியில் தசரா பக்தர்கள் வேடபொருட்கள் விற்பனைக்கு குவித்து வைப்பு
உடன்குடியில் தசரா பக்தர்கள் வேடபொருட்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
உடன்குடி:
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இவ்விழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி மாலை அணிந்து 61 நாள், 41 நாள், 21 நாள், 11 நாள் என விரதம் தொடங்கி இருந்து வருகின்றனர். இந்த பக்தர்கள் அணியும் வேட வேட பொருட்கள் உடன்குடியில் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் இரவு, பகலாக ஈடுபட்டுள்ளனர். மேலும் விற்பனைக்காக கடைகளில் வேடபொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. விரதமிருந்து வரும் பக்தர்கள் தேவையான வேட பொருட்களை வாங்கி வருகின்றனர். இப்பொருட்களை வாங்குவதற்காக தினமும் ஏராளமான பக்தர்கள் உடன்குடி பஜாரில் குவிந்து, தங்களுக்கு தேவையான வேட பொருட்களை வாங்கி வருகின்றனர்.