திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம்

5 புத்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நடந்தது.

Update: 2023-05-12 17:27 GMT

கண்ணமங்கலம்

கண்ணமங்கலத்தை அடுத்த 5 புத்தூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதி மகாபாரத அக்னி வசந்த விழா தொடங்கியது.

தினமும் பிற்பகல் மகாபாரத சொற்பொழிவும், கடந்த 3-ந் தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகங்களும் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இன்று துரியோதனன் படுகளம் நடந்தது.

கோவில் முன்பு அமைக்கப்பட்ட துரியோதனன் சிலை முன்பு, பீமன், துரியோதனன் வேடமணிந்து நாடக நடிகர்கள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடத்தினர். இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஆரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, அம்மனை தரிசனம் செய்து, மகாபாரத சொற்பொழிவை கேட்டு ரசித்தார்.

கோவில் சார்பில் விழாக்குழுவினர் எம்.எல்.ஏ.வுக்கு சால்வை அணிவித்து வரவேற்றனர். மாலையில் தீ மிதி விழா நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்தபடி கோவிலை வலம் வந்தனர். இரவில் முருகன் திருவிளையாடல் நாடகம் நடைபெற்றது.

நாளை (சனிக்கிழமை) தருமர் பட்டாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்