சோதனை ஓட்டத்தின் போது என்ஜீன் கோளாறு காரணமாக நடுவழியில் நின்ற ரெயில்..!

சோதனை ஓட்டத்தின் போது என்ஜீன் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

Update: 2022-09-16 13:37 GMT

சென்னை,

சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-ரேணிகுண்டா இடையே இன்று அதிவேக ரெயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்த சோதனை ஓட்டம், பயணிகள் ரெயில்களின் அதிகபட்ச வேகமான 130 கி.மீட்டர் முதல் 145 கி.மீட்டர் வரை இயக்கக்கூடிய வகையில் தண்டவாளம் தகுதியுடன் உள்ளதா? என்பதை கண்டறிய நடைபெற்றது.

இந்த ரெயில் இன்று காலை 10.45 மணியளவில் சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் 12.15 மணியளவில் ரேணிகுண்டா சென்றடைந்தது. பின்னர் மீண்டும் இந்த ரெயில் பிற்பகல் 1 மணிக்கு ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டது. இந்த நிலையில் அரக்கோணம் ரெயில் நிலையம் வந்த போது என்ஜீன் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக அரக்கோணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து என்ஜீன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து என்ஜீனை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் மாற்று என்ஜீன் பொருத்தப்பட்டு ரெயில் புறப்பட்டு சென்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்