தவக்காலத்தையொட்டி கிறிஸ்தவர்கள் சிலுவைப்பாதை வழிபாடு
தவக்காலத்தையொட்டி சதாகுப்பத்திலிருந்து கிறிஸ்தவர்கள் சதாகுப்பத்திருந்து பெருந்துறைப்பட்டு தேவாலயத்துக்கு சிலுவைப்பாதை வழிபாடு மேற்கொண்டனர்.
வாணாபுரம்
தவக்காலத்தையொட்டி சதாகுப்பத்திலிருந்து கிறிஸ்தவர்கள் சதாகுப்பத்திருந்து பெருந்துறைப்பட்டு தேவாலயத்துக்கு சிலுவைப்பாதை வழிபாடு மேற்கொண்டனர்.
சிலுவைப்பாதை
கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதை அவர்கள் 40 விரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இதனையொட்டி தேவாலயங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதன்படி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று சதாகுப்பம் அந்தோணியார் ஆலயத்தில் இருந்து பங்குத்தந்தை வின்சென்ட் தலைமையில் காலை 10 மணிக்கு சிலுவைப்பாதை யாத்திரை தொடங்கியது.நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் சிலுவைகளை சுமந்து திருவண்ணாமலை சாலை வழியாக பெருந்துறை பட்டு தூய காணிக்கை அன்னை ஆலயத்திற்கு மதியம் 12 மணியளவில் வந்தடைந்தனர். தொடர்ந்து ஒவ்வொரு ஸ்தலங்களில் இயேசுவை சிலுவையில் அறைவதை நினைவுபடுத்தும் நிகழ்ச்சியும் கல்லறையில் அடக்கம் செய்ததை நினைவு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கூட்டுத்திருப்பலி
அதனை தொடர்ந்து தேவாலயத்தில் சிறப்பு கூட்டுத்திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஜான்ஜோசப், ஜூலியன், விப்லான்ஸ்டீபன்உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இதேபோல் சுற்று வட்டார பகுதியான தென்கரும்பலூர், அந்தோணியார்புரம், சதாகுப்பம், வாழவச்சனூர், தலையாம்பள்ளம். அள்ளிக்கொண்டபட்டு, பெருந்துறைபட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூங்கில்துறைப்பட்டு, சவேரியார்பாளையம், மேல்சிறுவள்ளூர், அருளம்பாடி, ஈருடையாம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.