நலத்திட்ட உதவிகளை துர்கா ஸ்டாலின் வழங்கினார்

திருவெண்காட்டில் நலத்திட்ட உதவிகளை துர்கா ஸ்டாலின் வழங்கினார்

Update: 2023-09-20 18:45 GMT

திருவெண்காடு:

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சொந்த ஊரான மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் துர்கா ஸ்டாலினின் தந்தை மறைந்த தலைமை ஆசிரியர் ஜெயராமனின் நினைவு நாள் அவரது வீட்டில் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயராமனின் உருவப்படத்திற்கு துர்கா ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மாலையில் அவரது இல்லத்தில் திருவெண்காடு பகுதியை சேர்ந்த சுமார் 500 ஏழை மக்களுக்கு வேஷ்டி-சேலை உள்ளிட்டவைகளை வழங்கினார். தொடர்ந்து தி.மு.க. மூத்த முன்னோடிகள், நிர்வாகிகளுக்கு வேஷ்டி- சேலை மற்றும் நிதி உதவி ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி துரைராஜன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி மற்றும் தி.மு.க. பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்