குன்னூர் அருகே துர்கா பூஜை விழா

குன்னூர் அருகே துர்கா பூஜை விழா

Update: 2022-10-07 18:45 GMT

குன்னூர்

இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் துர்கா பூஜை விழாவை பெங்கால் இன மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி குன்னூர் அருகேயுள்ள அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் பெங்கால் இன மக்கள் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு வளாகத்தில் 61-வது ஆண்டு துர்கா பூஜை விழாவை விமர்சையாக கொண்டாடினர்.

இதில் இயற்கை சார்ந்த பொருட்களும் ஆர்கானிக் வண்ணத்திலும் விநாயகர், லட்சுமி, துர்கா, சரஸ்வதி, முருகர் சிலைகள் பிரம்மாண்டமாக வடிவமைத்து வைக்கப்பட்டிருந்தது.வடமாநில மக்களான பெங்கால் இன மக்கள் தங்களது பாரம்பரிய வழிபாடுகளுடன் பூஜைகளை நடத்தி வழிபட்டனர்.

மேலும் சுமங்கலி பூஜையில், அம்மனுக்கு செந்தூரம் திலகமிட்டு, பூஜைகளை, மகளிரே நடத்தி வழிபட்டனர் தொடர்ந்து சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று, காட்டேரி நீர்வீழ்ச்சியில் கரைக்கப்பட்டன. இதில் வட மாநில பக்தர்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்