மயான கொட்டகை இல்லாததால் மழையில் அணைந்த சிதை

மயான கொட்டகை இல்லாததால் மழையில் சிதை அணைந்தது.

Update: 2022-09-04 18:29 GMT

உடலை எரியூட்டினர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே கீழக்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சக்திவேல்(வயது 17). மாற்றுத்திறனாளியான இவர், கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார்.

இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் கீழக்குடிகாடு கிராமத்தில் கொள்ளிடக்கரையில் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு மயான கொட்டகை இல்லாத நிலையில், திறந்தவெளியில் அவரது உடல் எரியூட்டப்பட்டது.

சிதை அணைந்தது

இந்நிலையில் திடீரென அப்பகுதியில் பெய்த மழையால் எரியூட்டப்பட்ட சிதை அணைந்தது. பின்னர் மீண்டும் எரியூட்டப்பட்டு, அவரது உடல் முழுமையாக தகனம் செய்யப்பட்டது.

அங்கு ஒரு மயான கொட்டகை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மயானத்திற்கு செல்ல சாலை வசதி, மின்விளக்கு வசதி ஏற்படுத்திக் தர வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக மயாக கொட்டகை, சாலை வசதி, மின் விளக்கு வசதியை உடனடியாக ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்