நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைபெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
பவானிசாகர்
நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
பவானிசாகர் அணை
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருப்பது பவானிசாகர் அணையாகும். இந்த அணையின் மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன் வாய்க்கால்கள் வழியாக 2 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீலகிரி மலைப்பகுதியே பவானிசாகர் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். அங்கு மழை பெய்யும்போதெல்லாம் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கும்.
நீர்வரத்து குறைந்தது
இந்தநிலையில் நீலகிரி மலை பகுதியில் தற்போது மழை பெய்யாத காரணத்தால் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 1,168 கனஅடி தண்ணீர் வந்தது அப்போது அணையின் நீர்மட்டம் 77.09 அடியாக இருந்தது.
நேற்று மதியம் 2 மணியளவில் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 211 கன அடியாக குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் 76.89 அடியாக குறைந்தது.