திராவகம் குடித்து விட்டு ரெயில்வே தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளி

ுழித்துறை அருகே திராவகம் குடித்து விட்டு ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2023-04-24 18:45 GMT

நாகர்கோவில், 

குழித்துறை அருகே திராவகம் குடித்து விட்டு ரெயில் தண்டவாளத்தில் படுத்திருந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தண்டவாளத்தில்மயங்கி கிடந்தார்

குழித்துறை அருகே உள்ள கண்ணக்கோடு பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் நேற்று முன்தினம் மாலையில் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப் பார்த்த ெபாதுமக்கள் அவர் பிணமாக கிடப்பதாக கருதி நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் ஜெயபால், சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் அங்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். முதலில் இறந்தவரின் பெயர், விவரங்கள் தெரியாமல் இருந்தது.

வறுமை

இதனையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் குழித்துறை பாகோடு பகுதியை சேர்ந்த ஜாண்சன் (வயது 55) என்பது தெரிய வந்தது. இவர் கூலி தொழிலாளி ஆவார். இவருக்கு மனைவியும், 3 மகள்களும் உண்டு. 2 மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடைசி மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதற்கிடையே ஜாண்சனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடல் நலக்குறைவு காரணமாக ஜாண்சனால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வறுமையால் அவரது குடும்பம் வாடி வந்தது. எனினும் ஜாண்சன் யாரிடமாவது பணம் வாங்கிச் சென்று மது குடித்துவிட்டு சுற்றித் திரிந்துள்ளார். இதனால் வீட்டில் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

போலீஸ் விசாரணை

சம்பவத்தன்று மனைவியுடன் தகராறு செய்த ஜாண்சன் வீட்டை விட்டு வெளியேறி திராவகம் குடித்துவிட்டு ரெயில் தண்டவாளத்தில் வந்து படுத்துள்ளார். சுமார் 15 நிமிடங்கள் வரை அவர் தண்டவாளத்தில் படுத்திருந்தார். அந்த சமயத்தில் ரெயில் எதுவும் வராததால் மயங்கிய நிலையிலேயே கிடந்தார். இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். எனினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஜாண்சன் இறந்துள்ளார்.

மேற்கண்ட விவரங்கள் விசாரணையில் தெரிய வந்தன. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்