போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய போதை வாலிபர் கைது
போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய போதை வாலிபர் கைது செய்யப்பட்டார்
மதுரை அண்ணா பஸ்நிலைய பகுதியில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் வைரகுமார். சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டு இருந்தார். அப்போது பாரில் இருந்து வெளியே வந்த வாலிபருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வாலிபர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் திட்டி மதுபாட்டிலால் அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அவர் மதிச்சியம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் சாத்தமங்கலம், தாசில்தார் நகரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 24) என்பது தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டல் விடுத்ததாக வாலிபரை கைது செய்தனர்.