போதை பொருள் விற்றவர் கைது
ஆம்பூரில் போதை பொருள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ஆம்பூரில் உள்ள பல்வேறு கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்கள் அடங்கிய பாக்கெட்கள் விற்கப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் பாலகிருஷ்ணனுக்கு புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மாலை ஆம்பூர் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.
வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள ஒரு கடையில் சோதனை நடத்திய போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 75 போதை பொருள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து ஆம்பூர் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து போதை பொருள் விற்ற வட புதுப்பட்டு பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 49) என்பவரை கைது செய்தனர்.