போதைபொருட்கள் விழிப்புணர்வு ஊர்வலம்

போதைப்பொருள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-11-03 07:30 GMT

நல்லம்பள்ளி:-

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் மது மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி அதியமான்கோட்டையில் நடந்தது. ஊர்வலத்தை சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகராஜன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் மது மற்றும் புகையிலை பொருட்கள் உட்கொள்வதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், இந்த பழக்கத்திற்கு சிறுவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஈடுபட கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் கிராம வளர்ச்சி குழு தலைவர் பிரேம்குமார், தலைமை காவலர் கண்ணன், ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்