போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-08-16 18:47 GMT

உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் நேற்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை கங்காதேவி தலைமை தாங்கினார். தமிழ் ஆசிரியர் ராமலிங்கம் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்டக் கல்வி அலுவலர் ஜோதிமணி மற்றும் கல்வி ஆய்வாளர் செல்வக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லூர்து சேவியர் மற்றும் எழுத்தர் உஷா ஆகியோர் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகளை பற்றி மாணவிகளுக்கு எடுத்துக் கூறினார்கள். பள்ளியில் தொடங்கிய ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. முடிவில் கணித ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்