போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்புவனத்தில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-06-27 18:56 GMT

திருப்புவனம், 

திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிவகங்கை மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு, சிவகங்கை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு ஆகியவை சார்பில் போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு துணை சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், போதையினால் ஏற்படும் தீய பழக்கவழக்கங்கள் குறித்தும், அதிலிருந்து மீள்வது பற்றியும் மாணவர்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியில் நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சிவகங்கையில் உள்ள குடி மற்றும் போதை நோயாளிகளின் மறுவாழ்வு மைய இயக்குனர் மகாலிங்கம், மற்றும் இரு பிரிவுகளின் போலீசார், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். திருப்புவனம் போலீஸ் நிலையம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். பேரணி அரசு ஆஸ்பத்திரியில் ஆரம்பித்து நெடுஞ்சாலை வழியாக யூனியன் வந்தடைந்தது. பூவந்தி போலீஸ் நிலையம் சார்பில் திருமாஞ்சோலை அரசு மேல்நிலைப்பள்ளி, பூவந்தி அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு குறித்து இன்ஸ்பெக்டர் மணியன் உரையாற்றி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்