வாகன ஓட்டுனர் தொழிற்சங்கத்தினா் ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் வாகன ஓட்டுனர் தொழிற்சங்கத்தினா் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-04-28 19:53 GMT

கும்பகோணம்;

கும்பகோணம், அசூர் பைபாஸ் சாலை பகுதியில் தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற் சங்கம் சார்பில் நேற்று கருப்புக் கொடியேந்தி, வில்லை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட சமூக நீதி அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற் சங்க மாநிலச் செயலாளர் சுந்தரராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அத்திபள்ளி சோதனைச் சாவடியை அகற்ற வேண்டும், ஓட்டுநர் மற்றும் அரசு அதிகாரிகள் தாக்கப்படுவதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும், லஞ்சத்தை தடை செய்ய வேண்டும், வாகனத்தை வழிமறித்து லஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும், ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்