லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே லாரி கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி

Update: 2023-01-01 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

சென்னையில் இருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. தென்காசி மாவட்டம் நண்ணகரம் கிராமத்தை சேர்ந்த ராமையா மகன் நாராயணமூர்த்தி(வயது 33) என்பவர் லாரியை ஓட்டினார். உளுந்தூர்பேட்டை-சேலம் புறவழிச்சாலையில் உள்ள ரவுண்டானா பகுதியில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையின் குறுக்கே தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த நாராயணமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் நாராயணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விபத்துக்குள்ளான லாரியையும் அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து காரணமாக உளுந்தூர்பேட்டை-சேலம் புறவழிச்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்