காவேரிப்பட்டணம் அருகேபுளிய மரத்தில் லாரி மோதியது டிரைவர் படுகாயம்

Update:2023-07-30 01:15 IST

பர்கூர்

காவேரிப்பட்டணம் அருகே நாகரசம்பட்டியில் இருந்து அச்சமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள கிரானைட் தொழிற்சாலைக்கு கிரானைட் கல் ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனை வேலம்பட்டி அருகே உள்ள என்.தட்டக்கல் பகுதியைச் சேர்ந்த மோகன் (வயது 40) ஓட்டி வந்தார். ஜெகதேவி அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோர புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி நொறுங்கியது. இதில் டிரைவர் மோகன் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தார். பர்கூர் தீயணைப்பு நிலைய அலுவலர் பழனி தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்