கும்மிடிப்பூண்டி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

கும்மிடிப்பூண்டி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-30 09:18 GMT

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள மகாலிங்க நகரைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் செல்லன் (வயது 52). இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர்.

நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்ற செல்லன் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது மகன் பிரவீன் அவரை தேடி சென்றார். அப்போது அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மரத்தில் செல்லன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், செல்லனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லனின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்